இசையமைப்பாளர் கங்கை அமரன் திடீர் உடல் நலக் குறைவால் வைத்தியசாலையில் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Monday, January 6, 2025

இசையமைப்பாளர் கங்கை அமரன் திடீர் உடல் நலக் குறைவால் வைத்தியசாலையில் அனுமதி


இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது.

இயக்குநரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் திடீர் உடல் நலக் குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சிவகங்கையில் படப்பிடிப்பின்போது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், அவர் உடனடியாக மானாமதுரை அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரன், தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், இசையமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும், பாடகராகவும் நன்று அறியப்படுபவர்.

தற்போது 77 வயதாகும் கங்கை அமரன், நடிகர் சிவாஜியின் மகன் ராம்குமாரின் மகன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

சிவகங்கை வட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவர் உடனடியாக மானாமதுரை அரசு வைத்தியசாலையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment