ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை நாட்டு மக்கள் மீண்டும் தோற்றுவிப்பார்கள் என்பதை அறிந்தே அரசியல் பழிவாங்கல்கள் முன்னெடுப்பு - சட்டத்தரணி மனோஜ் கமகே - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 28, 2025

ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை நாட்டு மக்கள் மீண்டும் தோற்றுவிப்பார்கள் என்பதை அறிந்தே அரசியல் பழிவாங்கல்கள் முன்னெடுப்பு - சட்டத்தரணி மனோஜ் கமகே

(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை இன்னும் இரு வாரங்களில் கைது செய்ய அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. ராஜபக்ஷர்களை அரசியலில் இருந்து முழுமையாக புறக்கணிக்கும் வகையில் அரசியல் பழிவாங்கல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.

கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ நிதி சுத்திகரிப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் அச்சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தாமல் அரசியல் பழிவாங்கல்களுக்கு முன்னுரிமை வழங்கியது. அதுபோலவே தற்போதைய அரசாங்கமும் செயற்படுகிறது. நல்லாட்சி அரசாங்கத்தின் நிலையே இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படும்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை இன்னும் இரண்டு வார காலத்துக்குள் கைது செய்வதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இந்த அரசாங்கம் பலவீனமடைவது உறுதி.

நாட்டு மக்கள் மீண்டும் ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவிப்பார்கள் என்பதை நன்கு அறிந்தே ராஜபக்ஷர்களை அரசியலில் இருந்து முழுமையாக புறக்கணிப்பதற்கு அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுத்துள்ளது.

அரசாங்கத்தின் அனைத்து முறையற்ற செயற்பாடுகளையும் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம் என்றார்.

No comments:

Post a Comment