புதிய அரசாங்கம் பதவியேற்கும் வரை முக்கியமான கோப்பினை மறைத்து வைத்திருந்த அதிகாரி - பாராட்டிய ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Sunday, January 26, 2025

புதிய அரசாங்கம் பதவியேற்கும் வரை முக்கியமான கோப்பினை மறைத்து வைத்திருந்த அதிகாரி - பாராட்டிய ஜனாதிபதி

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்ட அதிகாரியொருவர் முக்கியமான கோப்பு ஒன்றினை புதிய அரசாங்கம் பதவியேற்கும் வரை மறைத்து வைத்திருந்தார் என தெரிவித்துள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அந்த அதிகாரியை பாராட்டியுள்ளார்.

முன்னைய அரசாங்கத்தின் தலையீட்டினை தவிர்ப்பதற்காகவே அந்த அதிகாரி குறிப்பிட்ட கோப்பினை சமர்ப்பிக்காமல் வைத்திருந்தார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அவ்வேளை அந்த வழக்கை தாக்கல் செய்திருந்தால் அந்த பெண் அதிகாரியை பதவியிலிருந்து நீக்கியிருப்பார்கள் அல்லது அந்த வழக்கை குழப்பியிருப்பார்கள் என தெரிவித்துள்ள ஜனாதிபதி இதன் காரணமாக புதிய அரசாங்கம் பதவியேற்க்கும் வரை அந்த அதிகாரி அந்த முக்கிய கோப்பினை சமர்ப்பிக்காமல் வைத்திருந்தார் என குறிப்பிட்டுள்ளார்.

தனிப்பட்ட ஆபத்தினையும் பொருட்படுத்தாமல் அவ்வாறு செயற்பட்ட அதிகாரியை ஜனாதிபதி பாராட்டியுள்ளர்.

ஊழல் மோசடிகள் குறித்த விசாரணைகளில் சட்ட பொலிஸார் உட்பட சட்ட அமுலாக்கல் தரப்பினர் எந்த வித தலையீடும் இன்றி செயற்படுகின்றனர் என தெரிவித்துள்ள ஜனாதிபதி, பிணை வழங்குவது சட்ட செயற்பாடுகளில் ஒரு பகுதி. அது அரசாங்கத்தின் பலவீனம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

சட்டமா அதிபர் திணைக்களம் 11 குற்றங்களை அடையாளம் கண்டுள்ளது, இதில் மூன்று குறித்து ஜனவரியில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி நாங்கள் தனிப்பட்ட நலன்கள் நோக்கங்கள் அடிப்படையில் இந்த வழக்குகளை தெரிவு செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment