(எம்,ஆர்.எம்.வசீம்)
ஜனாதிபதி செயலகத்தினால் விடுக்கப்பட்டிருக்கும் சுற்றுநிருபம் மூலம் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களுக்கு இந்த நாட்டில் இருக்கும் வெளிநாட்டு தூதுவர்களுடன் மேற்கொள்ளும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் வரையறை விதிக்கப்பட்டிருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தினால் ஜனவரி முதலாம் திகதியிட்டு வெளியிடப்படுள்ள சுற்றுநிருபம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி செயலாளரினால் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
அதில் வெளிநாட்டு தூதுவர்களோ வெளிநாடுகளில் இருந்து விசேட அதிகாரிகள் வரும்போது அவர்களுடன் இடம்பெறும் கலந்துரையாடலை வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் அங்குவந்து அதனை கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
அதேபோன்று ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவோ அல்லது ஒப்பந்தம் தொடர்பில் கலந்துரையாடவோ எந்த ஒரு அமைச்சருக்கும் ஆளுநருக்கும் அதிகாரம் இல்லை.
அதேபோன்று வெளிநாட்டு தூதுவர்கள் அல்லது வெளிநாட்டு அதிகாரிகளால் விடுக்கப்படும் இராப்போசன நிகழ்வு மற்றும் விழாக்களுக்கான அழைப்புகளை அமைச்சர்கள் யாரும் ஏற்றுக் கொள்வதில்லை என உறுதிப்படுத்த வேண்டும் என குறித்த சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையில் இருக்கும் வெளிநாட்டு தூதுவர்கள் அமைச்சர்களை சந்திப்பதாக இருந்தால், அதற்கு வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்து நேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றுநிருபத்தை பார்க்கும்போது சிரிப்பும் வருகிறது, அதேநேரம் கவலையாகவும் இருக்கிறது. ஏனெனில் இவ்வாறான கட்டுப்பாடுகள் வட கொரியாவில் கூட இல்லை என்றார்
No comments:
Post a Comment