இம்மாதம் முதல் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 14, 2025

இம்மாதம் முதல் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் பணி இம்மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பதில் அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அனைத்து புதிய தேசிய அடையாள அட்டைகளும் டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றப்படவுள்ளது.

அடையாள அட்டைகளைப் பெறுவதில் தற்போது ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க தாமதங்களை நிவர்த்தி செய்வதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.

டிஜிட்டல் அடையாள அட்டை முறையை செயல்படுத்துவதற்கான செலவீனமாக 20 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.

அச்செலவீன நிதிச் சுமையைக் குறைப்பதற்காக இந்தியாவின் நிதியுதவி பெறப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment