சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரை ! எதிராக மீண்டும் முன்னெடுக்கப்பட்ட தொடர் போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 14, 2025

சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரை ! எதிராக மீண்டும் முன்னெடுக்கப்பட்ட தொடர் போராட்டம்

யாழ்ப்பாணம், தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும், அதனைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை மீளவும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (12) ஆரம்பித்த போராட்டம் திங்கட்கிழமை (13) தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் சட்டத்தரணி ந.காண்டீபன், கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ், கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் எனப்பலரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment