ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக தலதா அத்துகோரள நியமனம் - News View

About Us

About Us

Breaking

Friday, January 3, 2025

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக தலதா அத்துகோரள நியமனம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (03.01.2025) இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக இதற்கு முன்னர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார பதவி வகித்தார்.

No comments:

Post a Comment