ரணில், தினேஷ் CID யில் வாக்குமூலம் வழங்க நீதிமன்றம் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Thursday, January 2, 2025

ரணில், தினேஷ் CID யில் வாக்குமூலம் வழங்க நீதிமன்றம் அனுமதி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கீகாரம் வழங்கியமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்வதற்காகவே குற்றப் புலனாய்வு திணைக்களம் அவர்களை அழைக்கவுள்ளது.

நாட்டில் நிலவிய மருந்து தட்டுப்பாட்டுக்கு நிவர்த்தி செய்யும் வகையில், இந்திய கடன் திட்டத்தின் கீழ் 182 வகையான மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அமைச்சரவையில் யோசனை முன் வைத்திருந்தார்.

தற்போது வெளிநாட்டுக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடு திரும்பிய பின்னர் இந்த சம்பவம் தொடர்பில் அவரிடமும் மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.

அவர்களது வசிப்பிடங்களுக்குச் சென்று அவர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்கான திகதி மற்றும் நேரங்களை பெற்றுக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாட்டுக்கு தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பாக மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இந்த அனுமதியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல 2022 செப்டெம்பர் 26ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தில் நாட்டுக்கு என்ன மருந்துகள் தேவை என்பது தொடர்பாக அமைச்சரவை உறுப்பினர்களை விசாரித்து அவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்ய வேண்டும் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மிஸ் லக்மினி கிரிஹாகம விடுத்த கோரிக்கையை ஏற்று மாளிகாகந்த நீதவான் லொச்சனி அபேவிக்ரம வீரசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தினருக்கு வழங்கிய அனுமதியின் பிரகாரம் அமைச்சரவைப் பத்திரம் அங்கீகரிக்கப்பட்டதன் அடிப்படையில், குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்திய அமைச்சரவை அமைச்சர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களதுக்கு அழைக்கப்பட்டனர்.

இதன்படி, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான அமைச்சரவை அமைச்சர்களில், முன்னாள் சுகாதார அமைச்சர் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி அமைச்சரவையில் இந்த மருந்து இறக்குமதிக்கான அமைச்சரவை பத்திரத்தை முன்வைத்தபோது, ​​நாட்டுக்கு என்ன மருந்துகள் தேவை? அது கூட குறிப்பிடப்படாத போது உண்மையில் மருந்து தட்டுப்பாடு இருந்ததா? அமைச்சரவைப் பத்திரத்தை ஆராயாமல் அமைச்சரவை எவ்வாறு அங்கீகாரம் வழங்கியது? என்பது தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர்.

நிமல் சிறிபால டி சில்வா, பந்துல குணவர்தன, ரமேஷ் பத்திரன, ரொஷான் ரணசிங்க, டக்ளஸ் தேவானந்தா, ஹரீன் பெர்னாண்டோ, பிரசன்ன ரணதுங்க, விஜயதாச ராஜபக்ச, விதுர விக்ரநாயக்க, கஞ்சன விஜேசேகர, புஷ்பகுமார, நசீர் அஹமட் மற்றும் நளின் பெர்னாண்டோ போன்ற 18 முன்னாள் அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவி வகித்தவர்களிடம் இதற்கு முன்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலங்களை பதிவு செய்திருந்தனர். 

No comments:

Post a Comment