இந்தியாவில் மிகவும் பணக்கார முதலமைச்சர்கனில் முதலிடத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளார். மிகவும் ஏழ்மையான முதலமைச்சராக மேற்கு வங்க மாநில முதலமைச்சர் ம்மதா பனார்ஜி உள்ளார்.
இந்தியாவின் ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான அமைப்பு மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம் ஆகியன இணைந்து இந்தியாவின் முதலமைச்சர்களின் பொருளாதார நிலைமையை தரப்படுத்தியுள்ளன.
முப்பத்தொரு மாநிலங்களின் முதலமைச்சர்கள் தேர்தல் பிரமாண பத்திரத்தை இந்திய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
அவ்வாறு தமது சொத்து விபரங்களை சமர்ப்பித்த நிலையில் இத்தகவல்களை ஒருங்கிணைத்து பணக்கார முதலமைச்சர்கள் பட்டியலை தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம் மற்றும் ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான அமைப்புகள் வெளியிட்டுள்ளன.
இப்பட்டியலிலுள்ள 31 மாநிலங்களின் முதலமைச்சர்களின் சொத்து மதிப்பு இலங்கை மதிப்பின்படி 5500 கோடி ரூபாவாகும்.
அந்த வகையில் இந்தியாவிலுள்ள 31 மாநிலங்களின் முதலமைச்சர்களில் ஒரு முதலமைச்சரின் சராசரி மாதாந்த வருமானம் மாதம் 50 இலட்சம் ரூபாவாகும். இது இந்தியாவின் சராசரி வருமானத்தை விட 7.3 மடங்கு அதிகமாகும். இதில் இரண்டு முதலமைச்சர்கள் பில்லியனர்களாக உள்ளனர்.
இந்தியாவிலேயே மிகவும் பணக்கார முதலமைச்சராக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தர வரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவரிடம் 3000 கோடி மதிப்புள்ள சொத்தக்கள் உள்ளன.
அடுத்ததாக அருணாச்சல் பிரதேச மாநில முதலமைச்சர் பெமா காண்டுவிடம் 1100 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. பணக்கார முதலமைச்சர் பட்டியலில் இவர் இரண்டாவதாக உள்ளார்.
கர்நாடாக மாநில முதலமைச்சர் சித்தராமையாவிடம் 180 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துகள் உள்ளன.
இப்பட்டியலில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சொத்து மதிப்பு 30 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழக முதல்வர் 14ஆம் இடத்தில் உள்ளார்.
சிறிய மாநிலமான புதுச்சேரி மாநிலத்தின் முதலமைச்சர் ரங்கசாமியிடம் 120 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக அப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் தமிழக முதலமைச்சர் மு.கு.ஸ்டாலினுக்கு எந்த கடனும் இல்லையென குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இப்பட்டியலில் மேற்கு வங்க முதலமைச்சர் ம்மதா பனார்ஜி 50 இலட்சம் ரூபா மதிப்புள்ள சொத்துக்களுடன் கடைசி இடத்தில் உள்ளார்.
ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா ஒன்றறை கோடி ரூபா சொத்து மதிப்புடன் வறுமையான முதலமைச்சர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
மூன்றரை கோடி சொத்து மதிப்புடன் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வறுமையான முதல்வர்கள் பட்டிலில் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
குற்றவியல் வழக்குகள் கொண்ட முதலமைச்சர்கள் பட்டியலையும் மேற்கூறிய அமைப்புகள் பட்டியலிட்டுள்ளன.
அதில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி (காங்கிரஸ்) அதிக வழக்குகளுடன் முதலிடத்திலுள்ளார். இவர் மீது 89 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அடுத்ததாக தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மீது 47 வழக்குகள் உள்ளன.
இந்தியாவில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எமது நாட்டின் தேர்தல்கள் ஆணைக்குழுவை விட பாரிய அதிகாரங்கள் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. அதனாலேயே மாநில முதலமைச்சர்களது சொத்து விபரங்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் உட்பட அரச எம்.பிக்களின் சொத்து விபரங்கள், தேர்தல் செலவினங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.
இலங்கையில் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 10 வேட்பாளர்கள் தேர்தல் செலவினங்களை தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவில்லை. இவ்விடயம் தெரியவந்ததையடுத்து தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்ட வேட்பாளர்களிடம் காலக்கெடு விதித்து விபரங்களை சமர்ப்பிக்க கோரியிருந்தது. எனினும் 10 வேட்பாளர்கள் இதுவரை தேர்தல்கள் செலவினங்களை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவில்லை.
அருள்
No comments:
Post a Comment