(எம்.மனோசித்ரா)
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தற்போதைய தலைவர் மற்றும் செயலாளரை ஏற்றுக் கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார். அதற்கமைய கட்சியிலிருந்த சகல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.
வியாழக்கிழமை (30) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், உள்ளுராட்சி மன்றத் தேர்தல் உட்பட எதிர்வரும் சகல தேர்தல்களிலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான கூட்டணி கதிரை சின்னத்தில் போட்டியிடும். இந்த கூட்டணிக்கு தலைமைத்துவ சபையொன்று காணப்படுகிறது. அதன் தலைவராக அநுரபிரியதர்ஷ யாப்பாவும், செயலாளராக நானும் செயற்படுகின்றோம்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தற்போதைய தலைவர் மற்றும் செயலாளரை ஏற்றுக் கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார். அதற்கமைய கட்சியிலிருந்த சகல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது. 95 சதவீதமானோர் மீண்டும் எம்முடன் இணைந்துள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் எம்.பி.க்கள் 30 பேர் எம்முடன் இணைந்துள்ளனர். வழங்கிய வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை என்று மக்கள் அதிருப்தியை வெளியிட்டு வருகின்ற நிலையில், அமைச்சர்கள் எவ்வித பிரச்சினையும் இல்லை எனக் கூறிக் கொண்டிருக்கின்றனர்.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு கடந்த அரசாங்கமே காரணம் என்கின்றனர். ஆனால் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து தாமே மீட்டதாகக் குறிப்பிடுகின்றனர். பொருளாதார நெருக்கடிகள் தீர்க்கப்பட்டுதான் நாடு தேசிய மக்கள் சக்தியிடம் கையளிக்கப்பட்டது. ஆனால் இவர்களுக்கு அதனை முன்னெடுத்துச் செல்வதே சிக்கலாகவுள்ளது. மக்களுக்கு இந்த யதார்த்தம் புரிய ஆரம்பித்துள்ளது என்றார்.
No comments:
Post a Comment