கனிய வள திணைக்களத்திடம் அறிக்கை பெற்ற பின்னரே சட்ட நடவடிக்கை - யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 5, 2025

கனிய வள திணைக்களத்திடம் அறிக்கை பெற்ற பின்னரே சட்ட நடவடிக்கை - யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்

யாழ்ப்பாணத்தில் சுண்ணக்கல்லுடன் கைப்பற்றப்பட்ட கனரக வாகனங்கள் தொடர்பில் கனிய வள திணைக்களத்தின் அறிக்கை பெறப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்வோம் என யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜயசிங்க தெரிவித்தார்.

சாவகச்சேரி பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனால் சோதனையிடப்பட்டு பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், சுண்ணக்கல் அகழ்வு என்பது பொலிஸாருக்கு பொறுப்பான காரியம் அல்ல. அது கனிய வளங்கள் திணைக்களத்துடன் சம்பந்தப்பட்ட விடயம். இது தொடர்பில் கனிய வளங்கள் திணைக்களமே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சில நாட்களுக்கு முன் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் சுண்ணக்கற்களுடன் வாகனம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. அதற்குரிய ஆவணங்கள், அறிக்கைகள் அனைத்தும் கனிய வளங்கள் திணைக்களத்திடம் பெற்றுக் கொண்டு விரைவில் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்வோம் என தெரிவித்தார்.

யாழ். விசேட நிருபர்

No comments:

Post a Comment