உலக சாதனை படைத்த மாற்றுத் திறனாளர் சமித்த துலானிற்கு புதிய ஈட்டி - News View

About Us

About Us

Breaking

Friday, January 31, 2025

உலக சாதனை படைத்த மாற்றுத் திறனாளர் சமித்த துலானிற்கு புதிய ஈட்டி

2024ஆம் ஆண்டு உலக மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுகளில் F44 ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் 67.03 மீற்றர் தூரம் எறிந்து, வெள்ளி பதக்கம் வென்று புதிய உலக சாதனை படைத்த இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் (SLCMP) உத்தரவு அதிகாரி (Warrant- Officer) சமித்த துலான் கொடித்துவக்குவிற்கு புதிய ஈட்டி ஒன்று பிரதமரினால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வு நேற்றுமுன்தினம் (29) கல்வி அமைச்சில் இடம் பெற்றது.

இந்த புதிய ஈட்டியை வழங்குவதற்கான ஏற்பாடுகளை 2024ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் இடம்பெற்ற மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றிய உத்தரவு அதிகாரி சமித்த துலான் கொடித்துவக்கு சந்தித்த சுபாஷினி நிரஞ்ஜலா வீரசிங்க என்பவர் மேற்கொண்டிருந்தார்.

இந்த நிகழ்வில் இலங்கை இராணுவ விளையாட்டு பணிப்பாளர், சுபாஷினி நிரஞ்சலா வீரசிங்க மற்றும் சமித்த துலானின் பயிற்றுவிப்பாளர் பிரதீப் நிஷாந்த ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment