‘ஸ்மார்ட் யூத் எக்ஸிபிஷன்' நிகழ்வு தொடர்பில் முறையான விசாரணை : இளைஞர் விவகார பிரதி அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 5, 2025

‘ஸ்மார்ட் யூத் எக்ஸிபிஷன்' நிகழ்வு தொடர்பில் முறையான விசாரணை : இளைஞர் விவகார பிரதி அமைச்சர்

(இராஜதுரை ஹஷான்)

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஊடாக இடம்பெற்ற ‘ஸ்மார்ட் யூத் எக்ஸிபிஷன் & நைட் - 2024’ நிகழ்வு தொடர்பில் கணக்காய்வு நாயகம் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும். நிதி மோசடி மற்றும் நிதி வீண்விரயம் தொடர்பில் ஆராய்வதற்கு சகல அமைச்சுக்களிலும் தனி விசாரணை அலகு ஸ்தாபிக்கப்படும் என இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இளைஞர்களின் எதிர்கால மேம்பாட்டுக்காகவே தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஸ்தாபிக்கப்பட்டது. ஆனால் கடந்த கால ஆட்சியாளர்கள் தமது பிள்ளைகளின் அரசியல் எதிர்காலத்துக்காக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தை பயன்படுத்தினார்கள். பல முறையற்ற செயற்பாடுகள் இடம்பெற்றன.

2024 ஜூன் மற்றும் ஜூலை மாத காலப்பகுதிகளில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட 'ஸ்மார்ட் யூத் நைட் நிகழ்வு தொடர்பில் கணக்காய்வு நாயகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆகவே இந்த அறிக்கையின் உள்ளடக்கம் குறித்து முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment