அமெரிக்காவின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளும் இயலுமை அரசாங்கத்துக்கு உண்டு - சாகர காரியவசம் - News View

About Us

About Us

Breaking

Monday, January 6, 2025

அமெரிக்காவின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளும் இயலுமை அரசாங்கத்துக்கு உண்டு - சாகர காரியவசம்

(இராஜதுரை ஹஷான்)

முன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு அமெரிக்காவின் முழுமையான ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளும் இயலுமை அரசாங்கத்துக்கு உண்டு. ராஜபக்ஷர்கள் குறித்த விசாரணைகளுக்கு முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச ஊடாக சாட்சியம் திரட்ட முயற்சிப்பது முறையற்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (6) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், விமல் வீரவன்ச பஷில் ராஜபக்ஷவின் சொத்துக்கள் தொடர்பில் நிதி குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு அளித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷவின் அமைச்சரவையில் இருந்து விமல் வீரவன்ச வெளியேற்றப்பட்டதன் பின்னர், அப்போதைய நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அந்த குற்றச்சாட்டுக்கு அமைய, நிதி குற்றப் புலனாய்வு பிரிவு தற்போது விமல் வீரவன்சவிடம் வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளது.

கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் அமைச்சரவையில் பதவி வகித்தபோது விமல் வீரவன்ச பஷில் ராஜபக்ஷ தொடர்பில் எவ்விதமான குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்கவில்லை. அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்டதன் பின்னரே போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். ஆகவே விமல் வீரவன்சவின் நேர்மை மற்றும் உண்மைத்தன்மை மீது நம்பிக்கை கிடையாது என்றார்.

No comments:

Post a Comment