விமல் வீரவன்சவுடன் வந்தமைக்கு காரணம் கூறிய உதய கம்மன்பில - News View

About Us

About Us

Breaking

Friday, January 3, 2025

விமல் வீரவன்சவுடன் வந்தமைக்கு காரணம் கூறிய உதய கம்மன்பில

பசில் ராஜபக்ச தொடர்பில் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 03 ஆம் திகதி தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின்போது தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச இன்று (03) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு (FCID) வருகை தந்திருந்தார்.

பசில் ராஜபக்ச தொடர்பில் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட விசாரணையின் ஒரு பகுதியாக விமல் வீரவன்ச அழைக்கப்பட்டுள்ளார்.

அவர் முன்னர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பான எழுத்து மூல தகவல்கள் அனைத்தும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த ஆவணங்களில் பசில் ராஜபக்சவின் அமெரிக்காவில் உள்ள சொத்துக்கள் பற்றிய விபரங்கள் அதில் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, ​​முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவும் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியிருந்தார். விமல் வீரவன்சவின் சட்டத்தரணியாக அவர் அங்கு முன்னிலையாகியிருந்தார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விமல் வீரவன்ச, பசில் ராஜபக்சவின் சொத்துக்களில் ஒரு குறிப்பிட்ட பகுதி தொடர்பிலேயே தான் வழங்கிய தகவல்கள் உள்ளதாகவும், ஊழலை தடுக்க உண்மையாக நினைத்தால், எஞ்சியுள்ள சொத்துக்கள் பற்றிய மேலதிக விபரங்களை அமெரிக்காவிடமிருந்து அரசாங்கம் விரைவாகப் பெற முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

கணிசமான ஊழலைக் கையாள்வதற்கு மேலோட்டமான நடவடிக்கைகளுக்குப் பதிலாக நேர்மையான முயற்சிகள் அவசியம் என்று விமல் வீரவன்ச இதன்போது குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment