97 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைனுடன் ஒருவர் கைது : பொஸ்னியா கடவுச்சீட்டுடன் கட்டுநாயக்கவில் கைது - News View

About Us

Add+Banner

Wednesday, January 8, 2025

demo-image

97 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைனுடன் ஒருவர் கைது : பொஸ்னியா கடவுச்சீட்டுடன் கட்டுநாயக்கவில் கைது

472750688_1062277489275013_8753891209334227761_n
சட்டவிரோதமான முறையில் இன்று (08) இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் ரூ. 97 மில்லியன் பெறுமதியான கொக்கைன் போதைப் பொருளை தனது பயணப் பெட்டியில் மறைத்துக்கொண்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற வெளிநாட்டவர் ஒருவரை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழு இன்று (08) கைது செய்துள்ளனர்.

66 வயதான குறித்த பொஸ்னியா பிரஜை கொலம்பியாவிலிருந்து குறித்த போதைப் பொருளுடன் பயணிக்கத் தொடங்கி கட்டாரின் டோஹாவுக்கு வருகை தந்துள்ளார். 

அதன்பின், அங்கிருந்து இன்று அதிகாலை 2.40 மணியளவில் கட்டார் எயார்வேஸ் விமானமான QR-662 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

குறித்த நபரை சோதனை செய்தபோது, அவரது பயணப் பொதிக்குள் கால்களை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் 114 பிரஷ்களுக்குள் 2 கிலோ 759 கிராம் கொக்கைன் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் அவரை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பொஸ்னியா பிரஜை மற்றும் மீட்கப்பட்ட கொக்கைன் போதைப் பொருட்களை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
472827842_1062277492608346_6356684451096901650_n

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *