நாட்டில் நேற்று (03) சனிக்கிழமை வரை 88,000 மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த வகையில், 34,000 மெற்றிக் தொன் பச்சை அரிசி மற்றும் 54,000 மெற்றிக் தொன் நாட்டரிசியும் கையிருப்பில் உள்ளதாகவும் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அரிசி இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள அனுமதி எதிர்வரும் (10) வெள்ளிக்கிழமை நிறைவடைகிறது.
இதன் பின்னர் இறக்குமதி செய்யப்படும் அரசி, திருப்பி அனுப்பப்படுமென வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
சந்தையில் அரசிக்கு தட்டுப்பாடு நிலவியதால், தனியார் துறையினருக்கு அரசியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
இந்தக் காலப்பகுதியில் இவர்கள் 75,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்துள்ளனர். இவற்றில் 32,000 மெற்றிக் தொன் பச்சரிசியும் 43,000 மெற்றிக் தொன் நாட்டரிசியும் உள்ளடங்குகின்றன.
No comments:
Post a Comment