விடுவிக்கப்பட்டார் யோஷித ராஜபக்ஷ : 5 கோடி ரூபா கொண்ட இரண்டு பிணையாளர்கள் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 26, 2025

விடுவிக்கப்பட்டார் யோஷித ராஜபக்ஷ : 5 கோடி ரூபா கொண்ட இரண்டு பிணையாளர்கள்

கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (27) உத்தரவிட்டுள்ளது.

யோஷித ராஜபக்ஷ 50 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித, இரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் உள்ள 3 1/2 கோடி ரூபா பெறுமதியான வீட்டுடனான காணியொன்றை கொள்வனவு செய்வதற்கான நிதி வழிவகையை எவ்வாறு பெற்றார் என்பது தொடர்பில், பணத் தூய்மையக்கல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.

34 மில்லியன் ரூபாவுக்கும்  (3 1/2 கோடி ரூபா) அதிக பெறுமதியான காணி ஒன்றை வாங்கியமை தொடர்பாக 2006 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க தண்டனைக் கோவைச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிடுவதற்கு, போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து யோஷித ராஜபக்ஷ பெலியத்த பகுதியில் வைத்து கடந்த சனிக்கிழமை (25) குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு  நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தர்.

இந்நிலையில், யோஷித ராஜபக்ஷ இன்றையதினம் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சார்பில் மன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல்  திலீப பீரிஸ் கீழ் காணும் விடயங்களை முன்வைத்தார்.

'சந்தேகநபரான யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள நிதி தூய்தாக்கல் வழக்குகளில் ஒன்றாக இதனையும் அடையாளம் காண  முடியும் எனவும் இந்த விடயம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகள் சுயாதீனமாக இடம்பெறவில்லை எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டினார்.

குறித்த சர்ச்சைக்குரிய சொத்துக்களை கொள்வனவு செய்தவராக யோஷிதவின் பாட்டி டேசி பொரஷ்ட் என்பவர் அடையாளம் காணப்பட்டாலும் அவருக்கு இவ்வாறான அதிக பெறுமதி கொண்ட சொத்துக்களை கொள்வனவு செய்வதற்கான வருமானம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் இந்த சொத்துக்கள் அவரது பெயரில் கொள்வனவு செய்யப்பட்ட போதிலும் அதன் பின்னணியில் மூன்றாவது நபர் ஒருவரின் தலையீடு இருந்துள்ளதாகவும் இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் யோஷிதவின் நேரடி தலையீடு மற்றும்  அதற்கான சாட்சியங்கள் உள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.

மேலும் சந்தேகநபரான யோஷித ராஜபக்ஷ கடந்த 25 ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு விசாரணை தொடர்பில் அவர் 2017 ஆம் ஆண்டு வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளதாகவும் அதன் பின்னர் சந்தேகநபர் எந்தவித வாக்குமூலத்தையும் வழங்கவில்லை எனவும் இதற்கமைய சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதால் அவரை விளக்கமறியில் வைக்குமாறும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கோரிக்கை விடுத்தார்.
சந்தேகநபர் தொடர்பில் பிணை கோரிக்கை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மென்டிஸ் இந்த வழக்கு தொடர்பில் முதலாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டவர் 8 வருடங்களுக்கு முன்னர் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்பதால் சந்தேகநபரையும் பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான் இந்த விடயம் தொடர்பில் 8 வருடங்களுக்கு மேல் விசாரணைகள் இடம்பெற்றுள்ள நிலையில் இந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க முடியாது என  தெரிவித்தார். 

எனினும்  நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை முன்நகர்த்தி கொண்டு செல்வதற்கு  போதுமான சாட்சியங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதற்கமைய சந்தேகநபரை 500 மில்லியன் ரூபா இரு சரீரப்பிணைகளில் செல்ல அனுமதியளித்த நீதவான் அவருக்கு வெளிநாட்டு பயணத் தடையும் விதித்து உத்தரவு பிறப்பித்தார்.  

No comments:

Post a Comment