தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, பிரிவெனாக்களிலுள்ள பௌத்த துறவு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களுக்கான பாடசாலை பாதணி வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று முன்தினம் (20) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு 11 தீர்மானங்களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2015 ஆம் ஆண்டு தொடக்கம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலைப் பாதணி வழங்கும் வேலைத்திட்டம் கல்வி அமைச்சின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், 2020 ஆம் ஆண்டு தொடக்கம் 2023 ஆம் வரைக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ள பிரிவெனாக்களிலுள்ள பௌத்த துறவு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களும் குறித்த வேலைத்திட்டத்தில் உட்சேர்க்கப்பட்டுள்ளனர்.
2025 ஆம் ஆண்டுக்கான குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் குழுவின் விதந்துரைக்கமைய கீழ்வரும் பாடசாலை மாணவர்கள், பௌத்த துறவு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களுக்குப் பாதணிகளைக் கொள்வனவு செய்வதற்கான ரூ. 3,000 வவுச்சர் ஒன்றை வழங்குவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
250 மாணவர் தொகைக்குக் குறைவான பாடசாலைகளில் கல்வி பயிலும் 650,000 மாணவர்களுக்கும்
250 மாணவர் தொகைக்குக் குறைவான பாடசாலை வகையைச் சாராத நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள தோட்டப்பாடசாலை மாணவர்கள் 140,000 பேருக்கும்
விசேட தேவையுள்ள மாணவர்கள் கல்வி பயில்கின்ற 28 பாடசாலைகளிலுள்ள 2300 மாணவர்களுக்கும்
பிரிவெனாக்களில் கல்வி பயில்கின்ற 30,000 பௌத்த துறவு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களுக்கும்
No comments:
Post a Comment