பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 21, 2025

பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக அரச போசாக்கு வேலைத்திட்டத்தை 2025 இல் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்றுமுன்தினம் (20) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு 11 தீர்மானங்களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தற்போது 1-5 வரையான வகுப்புக்களில் மாணவர்கள் தொகை 100 இற்கும் குறைவான அனைத்து அரச பாடசாலைகளிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும், விசேட கல்விப் பிரிவு அல்லது விசேட கல்விப் பாடசாலைகளிலுள்ள மாணவர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பிரிவெனாக்களிலுள்ள மாணவர்கள் உள்ளடங்கலாக 1.4 மில்லியன் மாணவர்களுக்கு நாடளாவிய ரீதியிலுள்ள 100 கல்வி வலயங்களில் 8,956 பாடசாலைகளில் “பாடசாலை உணவு வேலைத்திட்டம்” நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

குறித்த வேலைத்திட்டத்தை மேலும் திட்டமிட்ட வகையில் 2025 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தவும், ஆண்டுக்கான உயர்ந்தபட்சம் 1.5 மில்லியன் மாணவர்கள் பயனடையக் கூடிய வகையில் வரவு செலவுத் திட்டத்தில் நிதியொதுக்குவதற்கும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment