ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட 3 பஸ்கள் : வைத்தியசாலையில் 29 பேர் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 25, 2025

ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட 3 பஸ்கள் : வைத்தியசாலையில் 29 பேர்

காலி, இமதுவ, அங்குலுகஹா சந்தியில் மூன்று பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று (26) காலை 8.30 மணியளவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று பஸ்களிலும் பயணித்த 29 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு தனியார் பயணிகள் பஸ்களும், அலுவலக ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பஸ்ஸொன்றுமே விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஓடிக் கொண்டிருந்த இரண்டு பஸ்களும் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த 29 பேரும் இமதுவ மற்றும் கராபிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment