24 மணி நேரத்தில் 2,293 கொள்கலன்கள் விடுவிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, January 18, 2025

24 மணி நேரத்தில் 2,293 கொள்கலன்கள் விடுவிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கொள்கலன் விடுவிப்பு குறித்த அறிக்கையை துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இன்று (19) காலை 6.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பிரதான முனையத்திலிருந்து 2,293 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், இலங்கை சுங்கத்தால் துறைமுக வாயில்கள் வழியாக விடுவிக்கப்பட்ட கொள்கலன்களின் எண்ணிக்கை 2,074 என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்திற்குள், துறைமுகத்தில் சிக்கியிருந்த பாரிய அளவான கொள்கலன்களை விடுவிக்க துறைமுகம் மற்றும் சுங்கம் உள்ளிட்ட பிரிவுகள் நடவடிக்கை எடுத்த போதிலும், முனையங்களை விட்டு வெளியேறும் அளவை விட வாயில்களில் இருந்து வெளியேறும் கொள்கலன்களின் அளவு குறைவாக இருப்பதால் கொள்கலன் நெரிசல் குறையவில்லையென, இலங்கை துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment