திருகோணமலை - ஹபரணை வீதியில் விபத்து : இருவர் மரணம் : 35 பேர் காயம் - News View

About Us

About Us

Breaking

Friday, January 31, 2025

திருகோணமலை - ஹபரணை வீதியில் விபத்து : இருவர் மரணம் : 35 பேர் காயம்

தனியார் பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் மரணமடைந்துள்ளனர்.

இன்று (01) முற்பகல் ஹபரணை - திருகோணமலை வீதியில் கல்வங்குவ என அழைக்கப்படும் வளைவிற்கு அருகே திருகோணமலை நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்றும் திருகோணமலையிலிருந்து ஹபரண நோக்கிச் சென்ற வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் வேனின் சாரதி மற்றும் பஸ்ஸில் பயணித்த பெண் பயணி ஒருவர் ஆகிய இருவரே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த வேனின் சாரதி கிண்ணியா 02 பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் எனவும், மற்றையவர் ஹிக்கடுவை பகுதியைச் சேர்ந்த 66 வயதுடையவர் எனவும் தெரிய வந்துள்ளது.

பஸ் மற்றும் வேனில் பயணித்த சுமார் 35 பேர் காயமடைந்த நிலையில், ஹபரண மற்றும் தம்புள்ளை மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சடலங்கள் ஹபரணை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

ஹபரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment