எஞ்சிய இரு துப்பாக்கிகளையும் ஒப்படைத்த யோஷித ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Saturday, February 1, 2025

எஞ்சிய இரு துப்பாக்கிகளையும் ஒப்படைத்த யோஷித ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ அனைத்து உரிமம் பெற்ற துப்பாக்கிகளையும் ஒப்படைத்துள்ளாதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பிற்காக அனுமதிப்பத்திரத்துடன் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மறு பரிசீலனை செய்து மீண்டும் வழங்கப்படுவதின் கீழ் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது.

அதன்படி யோஷித ராஜபக்ஷவிடம் இருந்த 7 துப்பாக்கிகளில் 5 ஆரம்ப கட்டத்தில் ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையில் அவரிடம் இருந்த எஞ்சிய இரண்டு துப்பாக்கிகளும் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment