CID க்கு வரவழைக்கப்பட்டுள்ள பந்துல குணவர்த்தன - News View

About Us

About Us

Breaking

Sunday, December 15, 2024

CID க்கு வரவழைக்கப்பட்டுள்ள பந்துல குணவர்த்தன

சீனி வரி மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன தற்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு, வரவழைக்கப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க அவர் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று (03) முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட வரி ஐம்பது ரூபாவில் இருந்து இருபது ரூபாவாக குறைக்கப்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள வரி வருமான இழப்பு தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாக நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி பந்துல குணவர்தன அன்றைய காலப்பகுதியில் வர்த்தக, மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றியிருந்தார்.

அது தொடர்பில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பிலேயே இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment