புதிய சபாநாயகர் நியமனம் தொடர்பில் தீர்மானிக்கும் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று (16) பிற்பகல் 1.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களும் நாளையதினம் பாராளுமன்றத்தின் முதலாவது அலுவலக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதுடன் சபாநாயகர் நியமனம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சபாநாயகர் நியமனம், துணை சபாநாயகர் பதவிக்கு வந்த பிறகே நடக்கும். சபாநாயகர் பதவிக்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சபாநாயகர் பதவிக்கு ஆளுங்கட்சி சார்பில் ஏற்கனவே 3 பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தற்போதைய பிரதி சபாநாயகரின் பெயரும் அதில் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயரை முன்மொழிவது பொருத்தமானதல்ல என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும் எதிர்க்கட்சியில் இருந்து சபாநாயகர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயரை முன்மொழியவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment