போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித் ருவன் கொடித்துவக்கு ஆகியோர் இன்று (13) முற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டிருந்தனர்.
புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டதன் பின்னர் நிறுவனத்திற்கு பொறுப்பான அமைச்சர்கள் உத்தியோகபூர்வமாக விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.
விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் ஓய்வு பெற்ற எயார் சீஃப் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம உள்ளிட்ட விமான நிலைய அதிகாரிகள் குழுவும் இதில் கலந்துகொண்டது.
அங்கு, அமைச்சர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சேவைகளை வழங்கும் பல்வேறு திணைக்களங்கள், குடிவரவு மற்றும் சுங்க வளாகம், வங்கிகள், இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களுக்கும் சென்று கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
விமானப் பயணிகள் மற்றும் விமான நிலையத்திற்கு வந்திருந்த மக்களிடமும் அமைச்சர்கள் நேரில் சென்று கலந்துரையாடினர்.
இதன்போது, கருத்து வெளியிட்ட அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கட்டுநாயக்க விமான நிலையத்தில் 15 மில்லியன் விமானப் பயணிகளுக்காக 2023 ஆம் ஆண்டு நிறைவேற்றப்படவிருந்த பல முக்கிய திட்டங்கள் சட்டவிரோதமான கொடுக்கல் வாங்கல்கள் காரணமாக 2028ஆம் ஆண்டுக்கு தற்போது பின்னால் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது எனத் தெரிவித்தார்.
இந்த கண்காணிப்பு பயணத்திற்கு பிறகு அமைச்சர்கள் விமான நிலைய தொழிற்சங்க பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
(கட்டுநாயக்க – TKG கபில)
No comments:
Post a Comment