பிரபல தபேலா இசைக் கலைஞர் ஷாகிர் ஹுசைன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 73.
இந்திய பாரம்பரிய இசையான தபேலாவை உலகெங்கும் பறைசாற்றியவர் மும்பையைச் சேர்ந்த ஷாகிர் ஹுசைன்.
அமெரிக்கா சென்பிரான்சிஸ்கோ உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த தகவலை ஷாகிர் ஹுசைனின் நண்பரும் புல்லாங்குழல் கலைஞருமான ராகேஷ் சௌராசியா இன்று (15) தெரிவித்துள்ளார்.
பிரபல தபேலா இசை மேதை ஷாகிர் ஹுசைன் நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளுக்காக அமெரிக்கா, சென்பிரான்சிஸ்கோ உள்ள வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஷாகிர் ஹுசைன், அமெரிக்காவில் வசித்து வந்துள்ள நிலையில், அவருக்கு நுரையீரல் தொடர்பான பிரச்சினைகள் இருந்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த ஒரு வாரமாக ஷாகிர் ஹுசைன் மருத்துவமனையில் சிச்சை பெற்று வருவதாகவும், இன்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஷாகிர் ஹுசைன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஷாகிர் ஹுசைன் 1988 இல் பத்மஸ்ரீ, 2002 இல் பத்ம பூஷன் மற்றும் 2023 இல் பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.
1990 இல் இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருதும், சங்கீத நாடக அகாடமி பெல்லோஷிப், 2018 இல் ரத்னா சத்யா விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. 2024 பெப்ரவரியில் அவர் மூன்று கிராமி விருதுகளை பெற்றுள்ளார்.
No comments:
Post a Comment