அநுராதபுரத்திலுள்ள தனியார் கல்வி நிறுவனமொன்றில் நடைபெறும் பிரத்தியோக வகுப்புக்கு வந்திருந்த 18 வயது மாணவன் ஒருவரை கடத்திச் சென்று அவரிடமிருந்த ரூ. 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணத்தினை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குற்றத் தடுப்பு பிரிவில் செய்த முறைப்பாட்டினை அடுத்து விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அநுராதபுரம் விஜயபுர பகுதியில் வைத்து நேற்று (30) சந்தேகநபர்கள் இருவரை கைது செய்துள்ளதுடன் கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்திய கார் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 29,36 வயதுடைய அநுராதபுரம் விஜபுர மற்றும் ஹிதோகம பகுதியை வசிப்பிடமாக கொண்டவர்கள் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேக நபர்கள் தலைமறைவாகிள்ளனர்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, அநுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய பகுதியில் இருந்து தனியார் வகுப்புக்கு வந்திருந்த மாணவன் வகுப்பினை நிறைவு செய்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு செல்வதற்காக வேண்டி நின்றுகொண்டிருந்த மாணவனை காரில் கடத்திச் சென்று கூரிய ஆயுதம் ஒன்றினை காண்பித்து மரண அச்சுறுத்தல் விடுத்து கையிலிருந்த ஒரு தொகை பணத்தினையும் எஞ்சிய பணத்தினை வங்கி கணக்கட்டை ஊடாக ATM இயந்திரத்தில் இருந்தே கொள்ளையர்கள் பணத்தினை கொள்ளையடித்துள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அநுராதபுரம் நிருபர்
No comments:
Post a Comment