சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்தமை பாராட்டத்தக்கது - நாமல் ராஜபக்ச - News View

About Us

Add+Banner

Saturday, December 14, 2024

demo-image

சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்தமை பாராட்டத்தக்கது - நாமல் ராஜபக்ச

24-6679d2c7e29a4
சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல பாராளுமன்றத்தில் முன்வைத்ததாகக் கூறப்படும் போலியான கல்வித் தகைமை தொடர்பில் சமூக எதிர்ப்பு காரணமாக சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல தனது பதவியை இராஜினாமா செய்தமை பாராட்டத்தக்கது என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அப்படியிருந்தும், மேலும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அரசாங்கத்தின் ஏனைய உறுப்பினர்கள் சமூகமயப்படுத்தப்பட்ட கல்வித் தகுதியை நிரூபிக்கத் தவறினால் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எக்ஸ் தளத்தில் பதிவில், “ஊழலற்ற தூய்மையான பாராளுமன்றத்தை உருவாக்குவதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தொலைநோக்குப் பார்வை எனவும் இதன் காரணமாக அரச அதிகாரிகளின் தகுதிகள் தொடர்பில் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும்” எனவும் நாமல் ராஜபக்ச பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *