வைத்தியசாலைகளில் நிலவும் இன்சுலின் தட்டுப்பாட்டுக்கு 85,000 யூனிட் கொள்வனவு - News View

About Us

Add+Banner

Wednesday, December 4, 2024

demo-image

வைத்தியசாலைகளில் நிலவும் இன்சுலின் தட்டுப்பாட்டுக்கு 85,000 யூனிட் கொள்வனவு

insulinhelp5050
நாடு முழுவதுமுள்ள வைத்தியசாலைகளில் மிக்ஸ்டார்ட் இன்சுலின் (Mixtard insulin) பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வாரத்தில் மிக்ஸ்டார்ட் இன்சுலின் 85,000 யூனிட்களை கொள்வனவு செய்ய சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

வைத்தியசாலைகளில் தற்போது நிலவும் இன்சுலின் தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக மருத்துவ விநியோக பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார். 

“பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்க்க நாங்கள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளோம். 7,500 யூனிட் மிக்ஸ்டார்ட் இன்சுலின் கொள்வனவுக்கான ஆரம்ப நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் 5,000 யூனிட்கள் விரைவில் கிடைக்கவுள்ளன. 

இதற்கு மேலாக இந்த வாரத்திற்குள் 85,000 அலகுகளை கொள்வனவு செய்ய நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். இது தற்காலிக பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய போதுமானதாக இருக்கும்” என்றும் டாக்டர் விஜேசூரிய கூறினார்.

மூன்று வாரங்களுக்குள் விநியோகம் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை கொள்வனவு நடவடிக்கைகளில் ஏற்பட்ட தாமதத்தினால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலைமையை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *