முன்னாள் அமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கண்டனம் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 20, 2025

முன்னாள் அமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கண்டனம்

முன்னாள் அமைச்சர் அலி சப்ரி அவர்கள், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தம் தொடர்பில் ஜம்இய்யா தடையாக உள்ளது என தெரிவித்தமையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாக கண்டிக்கிறது.

இது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, அதன் வரலாறு முழுவதிலும் இலங்கையின் முஸ்லிம் சமூகத்தின் சமய மற்றும் சமூக உரிமைகள் மற்றும் நலன்கள் ஆகியவற்றை பாதுகாக்கும் பணியில் தொடர்ந்து அர்ப்பணத்துடன் பங்கேற்று வருகிறது என்பது அனைவரும் அறிந்த செய்தியாகும்.

அந்த வகையில், முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத் திருத்தங்கள் தொடர்பான விவகாரங்களில், அரசாங்கத்தால் அவ்வப்போது நியமிக்கப்படும் குழுக்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளோம்.

பல்வேறு பகுதிகளில் மார்க்க வழிகாட்டல்களுக்கு முரணாக அமையாமல் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதோடு, மார்க்கத்துக்கு முரண்படும் விடயங்களில் மாற்று வழிகளை முன்வைத்து, ஜம்இய்யா பல பரிந்துரைகளை வழங்கியிருப்பதையும் இங்கு குறிப்பிடுகிறோம்.

இத்துடன், முன்னாள் அமைச்சர் அலி சப்ரி அண்மையில் ஒரு ஊடகம் ஒன்றில் பேசியபோது, முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தத்திற்கு ஜம்இய்யா தடையாக உள்ளது என்று தெரிவித்ததை, அர்த்தமற்றதும் அடிப்படை அற்றதும் எனக் கண்டிக்கின்றோம்.

இது தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முழுமையான நிலைப்பாடு விரைவில் பொது மக்களுக்கு வெளியிடப்படும்.

No comments:

Post a Comment