இலங்கை மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்கியது ஆசிய அபிவிருத்தி வங்கி - News View

About Us

Add+Banner

Wednesday, December 11, 2024

demo-image

இலங்கை மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்கியது ஆசிய அபிவிருத்தி வங்கி

24-66af23b7601da
(நா.தனுஜா)

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் குறுஞ்செலவு நிதியளிப்பு வசதியின் கீழ் இலங்கை மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் நிதியுதவியினை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டின் தற்போதைய மற்றும் எதிர்கால சக்தி வலுத்துறை செயற்திட்டங்களை நிலைபேறான விதத்தில் முன்னெடுத்துச் செல்வதாக இலங்கையினால் வழங்கப்பட்ட உத்தரவாதத்துக்கு அமைவாகவே இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இது இலங்கைக்கான முதலாவது குறுங்செலவு நிதியளிப்பு வசதி என்பதுடன், புதுப்பிக்கத்தக்க சக்தி வலு ஆற்றலை மேம்படுத்தல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வலுத்துறையில் தனியார் துறையினரின் பங்கேற்பை ஊக்குவித்தல் என்பனவும் இதன் நோக்கங்களாக காணப்படுகின்றன.

இந்த உதவியானது 2030ஆம் ஆண்டளவில் மொத்த மின்னுற்பத்தியில் 70 சதவீத மின்சாரம் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களின் ஊடாக உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்ற இலங்கையின் இலக்கை எட்டுவதற்கு பெரிதும் பங்களிப்புச் செய்யும் என ஆசிய அபிவிருத்தி வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *