இந்த வருடத்தில் கலால் வரி திணைக்களத்தின் வருமானம், 23,200 கோடி (232 பில்லியன்) ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இவ்வருடம் நவம்பர் மாதம் 30ஆம் திகதி வரையிலான காலப்பகுதியிலேயே இந்த வருமானம் திணைக்களத்துக்கு கிடைத்துள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மதுபான உற்பத்தி நிலையங்களிலிருந்து கலால் வரியாக பெற்றுக் கொள்ளப்பட்ட வருமானம் மற்றும் புகையிலை வரி சட்டத்தின் கீழ் பெற்றுக் கொள்ளப்பட்ட வரி வருமானம் ஆகியன இணைந்து மேற்படி தொகை பதிவு செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கலால் திணைக்களத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், கலால் வரி திணைக்களம் 120 வருட வரலாற்றில் முதல் தடவையாக இந்த வருடத்திலேயே 200 பில்லியனை விட அதிகமான வருமானத்தை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய கொவிட்19 வைரஸ் சூழ்நிலை மற்றும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக வீழ்ச்சியடைந்திருந்த கலால் வரி வருமானம், தற்போது எதிர்பார்த்த இலக்கை அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment