நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் 10 வது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த 21 பெண்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 19 பேர் தேசிய மக்கள் சக்தியில் இருந்தும், இருவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, ஹரிணி அமரசூரிய, கௌசல்யா ஆரியரத்ன, சமன்மலி குணசிங்க, ஹேமாலி சுஜீவா, நிலந்தி கோட்டஹச்சி, ஒஷானி உமங்கா, துஷாரி ஜயசிங்க, அனுஷ்கா திலகரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, ஹசாரா லியனகே, சரோஜா சரோஜா பொல்ராஜ், முத்து ரத்வத்த, கீதா ஹேரத், ஹிருணி விஜேசிங்க, அம்பிகா சாமுவேல், சத்துரி கங்கானி, நிலுஷா கமகே, சாகரிகா அதாவுத, தீப்தி வாசலகே ஆகிய பெண்கள் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹினி குமாரி விஜேரத்ன மற்றும் சமிந்த்ரானி கிரியெல்ல ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இலங்கையின் நாடாளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட பெண் பிரதிநிதியான அம்பிகா சாமுவேல், பெருந்தோட்ட சமூகம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள இளைஞர்கள் அரசியலில் தீவிர பங்கு வகிக்கும் திறன் குறித்து நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பெருந்தோட்ட சமூகத்தின் பிரதான அரசியல் கட்சியொன்றின் மூலம் முதன்முறையாக தெரிவு செய்யப்பட்ட தமிழ் பெண்களில் ஒருவரான அம்பிகா சாமுவேல், தமது அரசியல் பிரவேசம், வெறும் தனிப்பட்ட சாதனையல்ல, குறிப்பாக மற்றவர்களுக்கு ஒரு படிக்கல் என வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment