சத்தியலிங்கத்திற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியல் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 17, 2024

சத்தியலிங்கத்திற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியல்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) தேசியப்பட்டியல் ஆசனத்தை ப.சத்தியலிங்கத்திற்கு வழங்குவதற்கு கட்சியின் அரசியற்குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (17) காலை இடம்பெற்றது.

இதன்போது கடந்த தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு கிடைத்த ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்தை வழங்கும் விடயம் தொடர்பாக நீண்ட விவாதங்கள் இடம்பெற்றது.

விவாதங்களின் பின்னர் குறித்த தேசியப்பட்டியல் ஆசனத்தை ஏற்கனவே வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த ப.சத்தியலிங்கத்திற்கு வழங்குவதற்கு அரசியல் குழுவால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த தீர்மானம் இவ்வாறு எடுக்கப்பட்டதாக யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment