கண்டியில் மற்றுமொரு சொகுசு வாகனம் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, November 17, 2024

கண்டியில் மற்றுமொரு சொகுசு வாகனம் மீட்பு

கண்டியில் பல சொகுசு வாகனங்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வந்த நிலையில் மற்றுமொரு நவீன சொகுசு டிஃபென்டர் ஜீப் வண்டி ஒன்று கண்டுபடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனமானது நேற்று (16) கண்டி தலைமையக பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சொகுசு வாகனம் கண்டியில் உள்ள முன்னணி மீன் விற்பனை வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ்மா அதிபருக்கு கிடைத்த நேரடி முறைப்பாடுக்கமைய இந்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 12 ஆம் திகதி தங்காலையில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் மூன்றரை கோடி ரூபா பெறுமதியான லான்ட் குரூஸர் ரக சொகுசு ஜீப் வாகனமொன்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment