மக்களின் எதிர்பார்ப்புகளை நிலைநாட்டுமாறு அரசியல் கட்சிகளை வலியுறுத்துவதாக சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் சுனில் ஜயசேகர விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இரண்டு நாட்களில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட புதிய பாராளுமன்றம் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாரிய பொறுப்பை ஏற்கும் என்று நம்புகின்றோம்.
அண்மைய ஆண்டுகளில் பாராளுமன்றத்தில் நாம் காணும் பொறுப்பற்ற நடத்தையின் அடிப்படையில் புதிய பாராளுமன்றம் மிகவும் முக்கியமானது. ஆகவே வரப்போகும் அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் பாரிய பொறுப்பு இருக்கும்.
நாம் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க உதவுவதன் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே அவர்களின் முதல் பணியாக இருக்க வேண்டும். கூடுதலாக, புதிய பாராளுமன்றம் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் கலாசாரத்தை பிரதிபலிக்க வேண்டும், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இரண்டும் தங்கள் பங்கை வகிக்க வேண்டும்.
அண்மைய நாட்களில் தேர்தல் நடவடிக்கைகளின்போது சில குழப்பமான சம்பவங்களை நாம் அவதானித்து வருவதால் இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி வருகின்றோம்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது பேணப்பட்ட பொதுவாகவே சாதகமான அரசியல் சூழல் இந்த பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது சில வேட்பாளர்களால் சிதைக்கப்படுவதைக் காணும்போது ஏமாற்றமளிக்கிறது.
எனவே, தேர்தலுக்கு முந்தைய இந்த இறுதி நாட்களில் மட்டுமல்ல, தேர்தலுக்குப் பின்னரும் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் நல்ல அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த வேண்டியது அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் கடமையாகும்.
இந்த காரணத்திற்காக, சமூக நீதிக்கான தேசிய இயக்கமாக மக்கள் எதிர்பார்க்கும் பொறுப்புகளை நிலைநிறுத்தி ஆரோக்கியமான அரசியல் கலாச்சாரத்தை ஊக்குவிக்க அனைத்து தரப்பினரையும் அழைக்கிறோம்.
No comments:
Post a Comment