சுங்க வரி செலுத்தாது கொண்டுவரப்பட்ட மதுபானம், சிகரெட்டுகள் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, November 7, 2024

சுங்க வரி செலுத்தாது கொண்டுவரப்பட்ட மதுபானம், சிகரெட்டுகள் மீட்பு

சுங்க வரி செலுத்தாது கொண்டுவரப்பட்ட மதுபான போத்தல்கள் மற்றும் சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 3ஆம் குறுக்குத் தெருவில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட மதுபான போத்தல்கள் மற்றும் சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சந்தேகநபரிடமிருந்து 210 மதுபான போத்தல்கள் 50,000 சிகரெட்டுகள் (250 காட்டுன்) மீட்கப்பட்டுள்ளன.

கைதானவர் 54 வயதுடைய கொழும்பு 10 பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

புறக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment