பல்கலைக்கழக மற்றும் உயர்தர மாணவ, மாணவிகள் வாக்களிக்க விடுமுறை - News View

About Us

About Us

Breaking

Saturday, November 9, 2024

பல்கலைக்கழக மற்றும் உயர்தர மாணவ, மாணவிகள் வாக்களிக்க விடுமுறை

எதிர்வரும் 14 ஆம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள பல்கலைக்கழக மற்றும் க.பொ.த உயர்தர மாணவ, மாணவிகளின் தேர்தல் விடுமுறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது, பொதுத் தேர்தல் அன்று அரச பல்கலைக்கழகங்களில் பணி புரிபவர்களுக்கும் அவற்றில் கல்வி கற்கும் மாணவ, மாணவிகளுக்கும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு இயலுமான விதத்தில் விடுமுறை வழங்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனியார் பல்கலைக்கழகங்களில் பணிபுரிபவர்களுக்கும் அவற்றில் கல்வி கற்கும் மாணவ, மாணவிகளுக்கும் தேர்தல் விடுமுறையை வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 2006 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் பிறந்த 18 வயதை பூர்த்தி செய்த அனைத்து க.பொ.த உயர் தர மாணவ, மாணவிகளுக்கும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு விடுமுறை வழங்குமாறு மேலதிக வகுப்புகளின் முகாமையாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment