ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) விமானம் ஒன்று இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தல் வெளியாகியுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்தை நோக்கி பயணிக்கவிருந்த விமானமே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளது.
தொழிநுட்பக் கோளாறு காரணமாகவே குறித்த விமானம் இன்று சனிக்கிழமை (09) அதிகாலை இரத்து செய்யப்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானச் சேவைக்குச் சொந்தமான யு.எல் 604 என்ற விமானமே இரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன்போது, விமானத்திலிருந்த சில பயணிகளை வேறொரு விமானத்தின் ஊடாக மெல்போர்ன் நகரத்திற்கு அனுப்பி வைக்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானச் சேவை நடவடிக்கை எடுத்துள்ளது.
எஞ்சிய பயணிகளை நாளை ஞாயிற்றுக்கிழமை (10) அதிகாலை 12.30 மணியளவில் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிட்னி விமான நிலையத்தில் நேற்று (8.11.2024) விமான என்ஜின் வெடித்து தீப்பற்றி விபத்துக்குள்ளான சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த தீ விபத்தால் விமான நிலைய பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது தொடர்பாக விமான பயணி கருத்து தெரிவிக்கையில், "விமானம் புறப்பட்ட பத்து நிமிடங்களுக்கு பிறகு விமானத்தில் பலத்த சத்தம் கேட்டது.
பிறகு வலதுப்புற என்ஜினில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் இதையடுத்து விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment