உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு : திருத்தங்கள் இருப்பின் செய்ய முடியும் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 7, 2024

உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு : திருத்தங்கள் இருப்பின் செய்ய முடியும்

இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இம்மாதம் (25) ஆரம்பமாகுமென, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இத்திகதியில் ஆரம்பமாகும் இப்பரீட்சை டிசம்பர் (20) வரை நடைபெறுமென்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள பாடசாலை மாணவர்களின் அனுமதி அட்டைகள் மற்றும் பரீட்சைக்கான கால அட்டவணை ஆகியன அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அதேவேளை, தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் மற்றும் பரீட்சைக்கான கால அட்டவணை என்பன தனிப்பட்ட முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தபால் மூலமாக அனுமதி அட்டைகளைப் பெற்றுக் கொள்ளாத தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk யிலிருந்து நவம்பர் 18 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்றும் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது. 

ஏதாவது திருத்தங்கள் தெளிவின்மை இருப்பின் அனைத்து பரீட்சார்த்திகளும் http://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்தில் நவம்பர் 18ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை திருத்தங்களை செய்ய முடியும். 

எவ்வாறாயினும் பரீட்சை நிலையங்கள் மாற்றப்பட மாட்டாது என்றும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment