பாராளுமன்றக் குழு ஊடகப் பேச்சாளராக பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழு ஊடகப் பேச்சாளராக பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர், வைத்தியர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று (21) நடைபெற்றபோதே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர், வைத்தியர் ப.சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment