அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவித்துள்ளார்.
இன்று (16) நாவலப்பிட்டியில் உள்ள மஹிந்தானந்த அளுத்கமகே அறக்கட்டளை அலுவலகத்தில் செய்தியாளர் மாநாட்டை நடத்தியபோதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
தனது சேவை கண்டி மாவட்ட மக்களுக்கு இனி தேவையில்லை என்பதை இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தல் நிரூபித்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் தான் அரசியலில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
கண்டி மாவட்ட மக்களின் முடிவுக்கு தலைவணங்குகிறேன் எனவும் அதன்படி, அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தன்னை அரசியலுக்கு அழைத்து வந்த அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment