நடந்து முடிந்த 2024 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பெயர்களை தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.
10 ஆவது பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 196 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய விசேட வர்த்தமானியே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.
1981 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்துக்கமைய, இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை தங்களது கட்சியின் சார்பில் தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை கட்சிகள் அறிவிக்க வேண்டும்.
அதன் பின்னர் 29 தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும்.
இத்தேர்தலில் 225 ஆசனங்களில் 159 ஆசனங்களைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி, 2/3 பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
அதற்கு அடுத்தபடியாக ஐக்கிய மக்கள் சக்தி 40 ஆசனங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment