வெள்ளத்தில் அக்குரனை நகரம் ! - News View

About Us

Add+Banner

Breaking

  

Friday, November 8, 2024

demo-image

வெள்ளத்தில் அக்குரனை நகரம் !

465716520_966639552160147_7865085837819558024_n
கண்டி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை (08) பிற்பகல் முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக அக்குரனை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதன் காரணமாக அக்குரனை நகரத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அக்குரனை நகரத்தில் உள்ள கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் என்பன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அக்குரணை நகரின் ஊடாக பாயும் பிரதான ஓயா மற்றும் வஹகல ஓயா பெருக்கெடுத்து ஓடுவதால் அக்குரணை நகரின் பிரதான வீதிகள் நீரில் மூழ்கியதுடன் ஹத்தே கன்வான, குடுகல மற்றும் ஏனைய பிரதேசங்களும் நீரில் மூழ்கியுள்ளன.

கண்டி - யாழ்ப்பாணம் ஏ 09 வீதியில் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக நகரம் வெள்ளத்தில் மூழ்கியதால் அந்த வீதியின் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்திருந்தது.
465734052_966653195492116_4633540859748609376_n%20(Custom)
465705791_966653098825459_2354380940955928270_n%20(Custom)
465726498_966653502158752_3740541042527550562_n%20(Custom)
465966717_966652968825472_7658811133674098557_n%20(Custom)
465710220_966653012158801_7225752958740768927_n%20(Custom)

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *