கட்டுநாயக்க விமான நிலையத்தில் தாயும், மகளும் கைது - News View

About Us

About Us

Breaking

Saturday, November 9, 2024

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தாயும், மகளும் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் ஒரு கோடியே 17 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் தாயும், மகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் நேற்று சனிக்கிழமை (09) பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பளை பிரதேசத்தில் வசிக்கும் 61 வயதுடைய தாய் மற்றும் 38 வயதுடைய மகளுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் துபாயிலிருந்து நேற்று பிற்பகல் 5 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களின் பயணப் பொதிகளிலிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட "பிளாட்டினம்" வகையுடைய 78,200 சிகரெட்டுகள் அடங்கிய 391 சிகரெட் கார்டூன்கள் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.

மேலும், கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளுடன் சந்தேக நபர்கள் இம்மாதம் 13ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment