மண்டபம் அகதிகள் முகாமில் தங்கி இருந்த 9 பேர் சட்டவிரோதமாக நாட்டுப் படகில் நேற்று மாலை புறப்பட்டு நெடுந்தீவு அருகே கரை சேர்ந்தனர்.
இந்தியா - தமிழகம் மண்டபம் ஏதிலிகள் முகாமிலிருந்த 09 பேரே சட்டவிரோதமாக நெடுந்தீவை வந்தடைந்துள்ளனர்.
நெடுந்தீவு மேற்கு பனங்காணிப் பகுதியில் படகு மூலம் இன்று அதிகாலை (10) வந்தடைந்தவர்கள், அரசு அலுவலர்களின் ஏற்பாட்டில் திருலிங்கபுரம் பகுதியில் உள்ள ஆலயத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னர் அனைவரும் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அதன் பின்னர் நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் அனைவரும் மாவிலித்துறை பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 3 ஆண்கள், 3 பெண்கள், 3 சிறுவர்கள் என தெரியவந்துள்ளது.
குறித்த 9 பேரையும் தற்போது காங்கேசன்துறை கடற்படை முகாமில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடுக்கடலில் இரு நாட்டு கடற்படை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நாட்டுப் படகில் இலங்கைத் தமிழர்கள் தப்பிச் சென்ற சம்பவம் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் மட்டத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment