அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் விஜயதாச ராஜபக்ஷ் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 21, 2024

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் விஜயதாச ராஜபக்ஷ்

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை எனவும் முன்னாள் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கண்டி தளதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர், தனது அரசியல் எதிர்காலம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மீண்டும் பாராளுமன்றத்திற்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்று கேட்டபோது, அதனை நிராகரித்தார்.

நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் ஊழல்வாதிகள் என்று குறிப்பிடுவதில் நானும் இருக்க விருப்பமில்லை என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment