முன்னாள் இராஜாங்க அமைச்சரான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று வெள்ளிக்கிழமை (22) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மீண்டும் ஆஜராகியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட வீடியோவில் பிள்ளையானின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை குறித்து வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்கு கடந்த 20ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு பிள்ளையானுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, கடந்த 20ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜரான பிள்ளையான், தான் தமிழ் மொழியிலும் வாக்குமூலம் வழங்க வேண்டும் என குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
பிள்ளையானின் கோரிக்கைக்கு இணங்க தமிழ் மொழியிலும் வாக்குமூலத்தை பெற்றுக் கொள்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரை இன்றையதினம் திணைக்களத்துக்கு அழைத்துள்ளனர்.
ஏற்கனவே நேற்றுமுன்தினம் (20) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான பிள்ளையான், சுமார் 5 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
அத்துடன் மேலதிக வாக்குமூலம் பெறுவதற்காக இன்று முற்பகல் 9 மணியளவில் சிவநேசதுரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment